தூத்துக்குடியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட துரைமுருகன் என்பவர் மீது போலீஸ் என்கவுன்ட்டர்: தற்காப்பிற்காக சுட்டுக்கொன்றதாக தகவல்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு  துரைமுருகன் என்பவர் மீது போலீஸ் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.  18 வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவரை காவல்துறையினர் இன்று சுட்டுக் கொன்றனர். நெல்லையில் ஜெகதீசன் என்ற பூ வியாபாரியை கொலை செய்த வழக்கில் சமீபத்தில் துரைமுருகன் தேடப்பட்டு வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நெல்லை அருகே ஜெகதீசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு உட்பட 5 கொலை வழக்குகள் துரைமுருகன் மீது நிலுவையில் இருந்த நிலையில் இவரின் இருப்பிடத்தை அறிந்து கைது செய்ய சென்றதாக கூறப்படுகிறது.

போலீசார் கைது செய்த போது துரைமுருகன் அங்கிருந்து தப்பி ஓட முயன்று இருக்கிறார். அவரை போலீசார் பிடித்த நிலையில் போலீசாருக்கும் துரைமுருகனுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துரைமுருகனிடம் பலத்த ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, போலீசாரை துரைமுருகன் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. காவல் ஆய்வாளரை துரைமுருகன் கடுமையாக தாக்கியதாக முதல் கட்ட தகவல்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து துரைமுருகனை போலீசார் தற்காப்பிற்காக சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

Related Stories:

More
>