×

புனேயில் பீமா நதிக்கரை அருகே 5 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டம்: மக்களிடம் கருத்துக்கேட்க முடிவு

புனே: புனேயில் பீமா நதிக்கரையோரம் 5 இடங்களில் சுமார் 30 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க, புனே ஜில்லா பரிஷத் திட்டமிட்டுள்ளது.புனே ஜில்லா பரிஷத் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நமாமி சந்திர பாகா  என்ற பெயரில் திட்டம் ஒன்று செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நதிக்கரையோரம் 5 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து ஆற்று நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கோரேகாவ் பீமா, ஹவேலியில் உள்ள பர்னே,  ஷிரூர் மற்றும் டவுண்ட் தாலுகாக்களுக்கு உட்பட்ட ராஹூ  மற்றும் மாங்டவ்கான் பரத் ஆகிய இடங்களில் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுக்காக இதுகுறித்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். மேலும், பொதுமக்களிடம் கருத்துக்கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.மகாராஷ்டிரா மாநில மாசுக்கட்டுப்பாட்டு மாநில அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பல்வேறு வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் விடப்படுகிறது. மேலும், பந்தர்பூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நதி நீரில் புனித நீராடுகின்றனர். எனவே, மேற்கண்ட ஆற்றங்கரையோரம் இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது அவசியம்’, என்றார்.

Tags : Pima ,Pune , Near Bhima river bank in Pune Sewage treatment in 5 places Plan to set up stations: Decide to consult people
× RELATED ரெண்டு பேருக்கும் கொம்பு ஊதும்...