தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு இன்று வாய்ப்பு உள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, ஈரோடு, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, தேனி, திண்டுக்கல், குமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வட மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மினதம்மா மழையும் பெய்யும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தென் கிழக்கு அரபிக் கடல், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

More
>