இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இதுவரை 9 கோடி பேருக்கு தடுப்பூசி

மும்பை: மகாராஷ்டிராவில் இதுவரை 9 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 9 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட்ட முதல் மாநிலம் என்ற பெயரை மகாராஷ்டிரா தட்டிச் சென்றுள்ளது. மகாராஷ்டிர அரசு நேற்று காலை 7 மணிக்கு வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: நேற்று முன்தினம் ஒரே நாளில் 6,048 மையங்களில் 7,29,530 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து மாநிலம் முழுவதும் இதுவரை 9,00,63,870 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை, 3,33,02,414 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 95,45,074 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் போடப்பட்டுவிட்டது. மருத்துவ பணியாளர்களில் 12,93,679 பேருக்கும் ஒரு டோசும், 11,01,822 பேருக்கு இரண்டாவது டோசும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 21,45,129 முன்கள பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 18,08,010 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: