ராஜ்நாத் சிங் பேச்சுக்கு கண்டனம் காந்தி சொல்லித்தான் சாவர்க்கர் கருணை மனு எழுதிக் கொடுத்தார்

புதுடெல்லி: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட இந்துத்துவா தலைவர் வீர சாவர்க்கர், தன்னை விடுவிக்கக் கோரி கருணை மனு எழுதி கொடுத்து விடுதலை ஆனார் என கூறப்படுகிறது. இதனால் சுதந்திர போராட்ட வீரர்களில் சர்ச்சைக்குரியவராக சாவர்க்கர் இன்றளவும் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், டெல்லியில் சாவர்க்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘மகாத்மா காந்தி அறிவுறுத்தலின்படிதான் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் கருணை மனு எழுதி கொடுத்தார். ஆனால் சாவர்க்கர் பற்றி தவறான வரலாறுகள் சித்தரிக்கப்படுகின்றன. இனியும் அவற்றை பொறுத்துக் கொள்ள முடியாது’’ என்றார். இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜ்நாத் சிங் வரலாற்றை திரிக்கப் முயற்சிப்பதாகவும், காந்திக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: