×

தமிழகத்திற்கு மேலும் 5.76 லட்சம் டோஸ் கோவிஷீல்டு வருகை

மீனம்பாக்கம், அக். 14: ஒன்றிய சுகாதாரத்துறை தமிழ்நாட்டிற்கு மராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய  மருத்துவக் கிடங்கிலிருந்து விடுவித்துள்ளது. அதில், 5.76 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 48 பார்சல்கள் இண்டிகோ ஏர்லைன்ஸ் என்ற தனியார் விமானம் மூலம் நேற்று பகல் 12.15 மணிக்கு புனேயில் இலிருந்து சென்னை விமான நிலையம் வந்தன. சென்னை விமான நிலைய அதிகாரிகள் தடுப்பூசி பார்சல்களை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Tags : Gowifield ,Tamil Nadu , Tamil Nadu, covishield, visit
× RELATED தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலான...