×

உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மேலும் ஒரு கூடுதல் குற்றவியல் வக்கீல்: தமிழக அரசு ஆணை வெளியீடு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார். உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக தலா 6 கூடுதல் குற்றவியல் வக்கீல்களை நியமனம் செய்து தமிழக அரசு கடந்த மாதம் ஆணை பிறப்பித்தது.  உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு எஸ்.ரவி, இ.அந்தோணி சகாய பிரபாகர், ஆர்.எம்.எஸ்.சேதுராமன், ஆர்.மீனாட்சி சுந்தரம், ஏ.திருவடி குமார், டி.செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு ஆர்.எம்.அன்புநிதியை கூடுதல் குற்றவியல் வக்கீலாக நியமனம் செய்து தமிழக தலைமை செயலாளர் வி.இறையன்பு நேற்று ஆணை பிறப்பித்துள்ளார்.

Tags : Madurai ,High Court ,Government of Tamil Nadu , Madurai Branch of the High Court, Government of Tamil Nadu, Order
× RELATED கொடைக்கானலில் போட் கிளப்பை...