×

திமுக அரசின் நல்லாட்சிக்கு நற்சான்று: விசிகவுக்கு மக்கள் மாபெரும் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்: திருமாவளவன் பெருமிதம்

சென்னை: .விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் மாவட்டக்குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட நான்கில் மூன்று தொகுதிகளிலும் ஒன்றியக் குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட 43ல் 27 தொகுதிகளிலும் விசிக  வெற்றி பெற்றுள்ளது.  இந்த வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும் வெற்றிக்கு அரும்பாடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கூட்டணியை இணக்கமாகவும் வெற்றிகரமாகவும் வழி நடத்தி சட்டமன்றத் தேர்தலில் சாதித்ததை போலவே இத்தேர்தலிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

Tags : DMK government ,Visika ,Thirumavalavan , DMK, Thirumavalavan
× RELATED விசிக கண்டன ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் பங்கேற்பு