சாப்பிட சொல்லி தாயை அடித்து கொன்ற மகன்

பெரம்பூர்: கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் முதல் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அம்சா(64). இவர் தனது மகன் சதீஷ்குமார்(36), குடிபோதைக்கு அடிமையானவர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த சதீஷ்குமார் தனது தாயை சாப்பிட சொல்லி வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சாப்பாடு வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தனது தாய் அம்சாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த அம்சாவை சதீஷ்குமார் 108 ஆம்புலன்ஸ் மூலம்  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அம்சா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின்பேரில் கொடுங்கையூர் போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Related Stories:

More
>