ஆன்லைன் சூதாட்டத்தில் வாலிபரிடம் 87 லட்சம் பறிப்பு: சொகுசு விடுதியில் தங்கியிருந்த சூதாட்ட தரகர் பிடிபட்டார்: 24 லட்சம், கார் பறிமுதல்

சென்னை:  சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த விக்னேஷ்(36). இவர் சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளின் போது ஆன்லைன் சூதாட்டத்தில் என்னை ஏமாற்றி 87 லட்சத்தை மோசடி நபர் ஒருவர் பறித்துவிட்டதாகவும், எனவே அவரிடம் இருந்து இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஆன்லைன் மூலம் கேசினோ, ‘லைவ் ஸ்போர்ட்ஸ்’ என்ற பெயரில் உள்ள இணையதளத்தில் விளையாடும் நபர்களை தன் வசப்படுத்தி ஐபிஎஸ் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட வைத்து வாலிபர்களிடம் பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்தது கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(34) என தெரியவந்தது.அவரது செல்போன் சிக்னல் உதவியுடன் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி இருந்தபோது அவரை கைது செய்தனர். மேலும், 24 லட்சம், 193 கிராம், 6 கிலோ வெள்ளி, சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More
>