×

மருத்துவமனையில் மன்மோகன் சிங்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரான மன்மோகன் சிங் (89) கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமானார். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் நீண்ட காலமாக இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறது. கடந்த மே மாதம் இதய வலி காரணமாக சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். இந்நிலையில், மன்மோகன் சிங் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல் நலக்குறைவால் அவர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை காங்கிரஸ் கட்சி மறுத்தது. காங்கிரஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. ’ என தெரிவித்தது.

Tags : Manmohan Singh , Manmohan Singh at the hospital
× RELATED மன்மோகன் சிங்குக்கு டெங்கு: எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்