சில்லி பாயிண்ட்...

* இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் (21 வயது) தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

* சர்வதேச கால்பந்து போட்டிகளில் 10 முறை ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமை போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கிடைத்துள்ளது. லக்சம்பர்க் அணிக்கு எதிரான உலக கோப்பை ஏ பிரிவு தகுதிச்சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

* அடுத்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ள யு-23 ஆசிய கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் அக். 25 முதல் 31 வரை அமீரகத்தில் நடக்க உள்ளன. இதொடருக்கான 28 வீரர்கள் அடங்கிய உத்தேச அணியை இந்திய கால்பந்து கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது.

* டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் விளையாடப் போவதில்லை என்று இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>