திருவள்ளூர் மாவட்டத்தில் வெற்றிப் பெற்ற 17 ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள் விவரங்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 47 ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள் காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 47 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களில் 30 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 17 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் நடைபெற்று நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றிப்பெற்ற ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களின் விவரம்; திருத்தணி ஒன்றியம், மத்தூர் வார்டு எண் 1 - டி.சுகுணா,  கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஏனாதிமேல்பாக்கம்  வார்டு எண் - 2 க.பரமசிவம், வார்டு எண் 5- ந.தேவராஜ், திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை வார்டு எண் 6- ஜா.ஜனாபாபு, பழையனூர் வார்டு எண் 1- ச.சந்தோஷ்குமார்,

சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் வார்டு எண் 2- இ.தேவி, வார்டு எண் 8 - ரா.லட்சுமணன், பூந்தமல்லி ஒன்றியம், காட்டுப்பாக்கம் வார்டு எண் 6-  மா.ஆகாஷ், மேல்மணம்பேடு வார்டு எண் 8 -  வி.வளர்மதி, நடுகுத்தகை வார்டு எண் 5-  கோ.உமாமகேஸ்வரி, நெமிலிச்சேரி வார்டு எண் 1-  து.தினேஷ்குமார், கடம்பத்தூர் ஒன்றியம், ஏகாட்டூர் வார்டு எண் 6- ஆர்.திலகவதி, எறையமங்கலம் வார்டு எண் 6-  எம்.லட்சுமி, உளுந்தை வார்டு எண் 4 - ஆர்.வசந்தா, ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கோபாலபுரம் வார்டு எண் 4- ச.அருண், பெரியநாகபூடி வார்டு எண் 1 - வெ.புவனேஸ்வரி, பூண்டி ஒன்றியம், நெய்வேலி வார்டு எண் 1 - ப.கவியரசு. இவர்களுக்கு தேர்தல் அலுவலர்கள் சான்றிதழ்கள் வழங்கினர்.

Related Stories:

More
>