கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!: குலுங்கிய கட்டிடத்தால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்..!!

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் உள்ள கிரீட் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸுக்கு சொந்தமான கிரீட் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். முதற்கட்ட தகவலின்படி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஏதென்ஸில் உள்ள ஜியோ டைனமிக் நிறுவனமானது கிழக்கு தீவில் உள்ள கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சில நிமிடங்களுக்கு பிறகு அடுத்தடுத்து அதிவுகளும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.1 ஆக பதிவாகியிருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புக்குழுவினர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். முழுமையான பாதிப்பு குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. 3 வாரங்களுக்கு முன்னர் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: