நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்! முழுமையான வழிகாட்டல்

நன்றி குங்குமம் தோழி

கடந்த அத்தியாயத்தில் ஒருவர் தொழில்முனைவோர் ஆவதற்காக சுயபரிசோதனை செய்துகொள்ளும் வகையில் அதற்கான தகுதிகளை கேள்வி -

பதில் வடிவத்தில் கொடுத்திருந்தோம். இந்த அத்தியாயத்தில் ெதாழில்முனைவோருக்கான அடிப்படைத் தகுதிகள் என்னென்ன என்பது பற்றிப் பார்ப்போம்...

ஒரு வேலை செய்வதற்கு முன்பு, நமக்குத் தேவையான முதல் விஷயம் மோட்டிவேஷன், உற்சாகம் என்றுகூட சொல்லலாம். அதற்கு நம்மைச் சுற்றிப் பார்க்கலாம். ஆனால், அதில் இருக்கும் முக்கியமான ஆபத்துக்களில் ஒன்று, எல்லோருமே பெரிய பெரிய ஆட்களாக இருப்பார்கள். நாம் இப்போதுதான் முதல் அடியே எடுத்து வைத்திருப்போம். உடனே டீமோட்டிவேட் ஆவதுடன், அடுத்து என்ன செய்வது என்பதே மறந்து போகும் அளவிற்கு சென்று விடுவோம்.

இப்படி, வெற்றியாளர்களின் கதைகள் எப்போதும் நம்மை சூழ்ந்து இருக்கின்றன. அவற்றை கவனிக்கும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவர்கள் எல்லாரும் தொடங்கியது பூஜ்ஜியத்தில் இருந்துதான் என்பதைத்தான்.

எத்தனை வயதானாலும் சரி விருப்பப்பட்ட ஒரு தொழிலை தொடங்குவதற்கு சில அடிப்படை குணங்களும் கொஞ்சம் கடின உழைப்பும் போதுமானது. அதென்ன அடிப்படை குணங்கள்? தன்னை வெளிப்படுத்த தயங்காதீர்கள்பிறரிடம் எப்போதும் உங்களை வெளிப்படுத்திக்கொள்ள தயங்குவது உங்கள் மீதும் உங்கள் திறமை மீதும் நம்பிக்கை இல்லாததின் அறிகுறி.

நீங்கள் முன்னெடுக்க போகும் ஒரு செயலைப் பற்றி உங்கள் நண்பர்கள் அல்லது பிறரிடம் அதை விளக்கும் முறையே உங்கள் மீதான அபிப்ராயத்தை மாற்றிவிடும். எனவே, தெரிந்த விஷயத்தைத் தெளிவாக தைரியமாக பேசுவதுடன், தெரியாத விஷயத்தைத் தெரியவில்லை என்று சொல்லவும் தயங்காதீர்கள். உங்கள் நம்பிக்கை மேல் பிறர் கொள்ளும் சந்தேகங்கள் உங்களை பாதிக்கும் என்றால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: நம்பிக்கை என்பது உங்கள் முயற்சியின் மீதும் திறமையின் மீதும் நீங்கள் கொள்ளும் அதிகாரம்.

எப்போதும்  ஒரு இன்ஸ்பிரேஷன் தேவை உங்கள் மனதைச் சோர்வடையச் செய்யும் நிகழ்வுகளை தவிர்த்துவிட்டு உங்களை சுற்றி இன்ஸ்பைரிங்கான விஷயங்களை வைத்துக்கொள்ளுங்கள். ஸ்டீவ் ஜாப்ஸ், ஆபிரகாம் லிங்கன், மலாலா என  தன் வாழ்வில் சாதித்த நூற்றுக்கணக்கானவர்களின் சுயசரிதை நம்மை சுற்றி இருக்கிறது. தடைகளை கடந்து வெற்றிபெற பாசிட்டிவான ஆளாக இருப்பது அவசியம். நமக்கு யார் இன்ஸ்பிரேஷனோ அவர்களைப் பற்றியெல்லாம் படியுங்கள். அவர்கள் வாழ்க்கையில் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். தடைகள் இல்லாமல் யாருமே இல்லை, ஆனால் அதை எப்படிக் கடப்பது என்பதில்தான் அனைத்தும் உள்ளது.

கிரியேட்டிவாக செயல்படுவது கிரியேட்டிவாக சிந்திப்பதும் புது விஷயங்களைக் கண்டுபிடிப்பதும் உங்களை தனித்துக் காட்டும். ஒரு விஷயத்தைப் பற்றித் தொடர்ந்து சிந்திக்கும் போது அதன் பல் கோணங்களை நம்மால் ஆராய முடியும். ஆனால் அதில் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் எதை விட்டுவிடுவது நல்லது என்பதை தேர்வு செய்வதில் கவனமாக இருப்பது அவசியம்.

இன்றைய சூழலில் எவ்வளவு பழைய கான்செப்ட்டாக இருந்தாலும் சரி அதை கிரியேட்டிவாக டெலிவரி செய்தால் போதும். எனவே நமக்கு எது செட் ஆகும், நம்மால் எதைத் திறம்பட செய்ய முடியும் என்பதையும், எதைப் புதிதாக கற்றுக் கொள்ளலாம் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.

பொறுப்பை கையாளும் மனப்பக்குவம்பொறுப்பை கையாள்வது  மனச்சோர்வளிக்கும் ஒரு விஷயம். சோர்வை ஏதாவது ஒரு முறையில் பாசிட்டிவாக மாற்றும் உத்திகளை கண்டுபிடிக்க வேண்டும். அதை எப்படி சமாளிக்க வேண்டும், எப்படி சோர்வைக் கடக்க வேண்டும் என்பதை நாமே கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் உதவி செய்யும். ஒரு சிறிய பிரேக் எடுத்துக்கொள்வது மறுபடியும் புத்துணர்ச்சியுடன் விஷயங்களை அணுகுவதற்கு உதவும். அதிக அழுத்தம் காரணமாக நாம் நினைத்த செயல் தடம் மாறிப்போக அதிக வாய்ப்புள்ளது. அவ்வேளைகளில் பொறுப்பை கையாளும் மனப்பக்குவமும், சோர்வில்லாமல்  உழைக்கும் மனப்பக்குவமும் ஒரு சுயதொழில்

தொடங்குபவருக்கு மிகவும் அவசியமானது.

எளிமையாக சிந்திப்பதும், எளிமையாக தொடங்குவதும்சாபுசிரில் ஒரு பிரபலமான கலை இயக்குநர். ஷங்கர் போன்ற பிரம்மாண்டமாக படமெடுக்கும் இயக்குநர்களுடன் பணியாற்றும் இவர் தனது எளிமையான சிந்தனைக்கு பெயர் போனவர். ஒருமுறை ஒரு படப்பிடிப்பிற்கு பிரம்மாண்டமான ஆஸ்பத்திரி செட் ஒன்று தேவைப்பட, குறிப்பிட்ட நேரத்திற்குள் போதிய இடம் கிடைக்காததால் இறுதியில் ஒரு பள்ளிக்கூடத்தை ஆஸ்பத்திரியாக மாற்ற திட்டமிடப்பட்டது.

சாபுவிற்கு கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தைக் கொண்டு ஒரு ஆஸ்பத்திரி செட் அமைக்கப்பட்டது. அந்த தினத்தின் காட்சிகள் எல்லாம் எடுத்து முடித்த பிறகு படத்தில் நடித்த நடிகர் சாபுவிடம் இவ்வளவு தத்ரூபமாக ஒரு ஆஸ்பத்திரியை எப்படி உருவாக்கினீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னது ‘எல்லா வேலையும் முடிந்த பிறகு கடைசியாக அனைத்து இடங்களிலும் டெட்டாலை தெளித்து விட்டேன், அவ்வளவுதான்’ என்றார். நீங்கள் முன்னெடுக்க போகும் முயற்சியாகட்டும் அல்லது ஒரு இக்கட்டான நேரமாகட்டும் நீங்கள் செய்யவேண்டியது அமைதியான மனதுடன் சூழலை ஆராய்ந்து எளிமையாக சிந்தித்து அதற்கு தீர்வு காண்பது மட்டுமே.

முடிவெடுக்கும் தைரியம்முன்னனுபவம் இல்லையென்றாலும் சில நேரங்களில் நம் அனுமானங்கள் சரியாகத்தான் இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் முடிவு எடுக்கும் தைரியம் நமக்கு இருப்பதில்லை. சுயதொழில் தொடங்கும் அனைவருக்கும் இந்த கட்டம் ஒரு இக்கட்டான நிலைமைதான். ஆனால் அதற்காகத்தான் நாம் ஆரம்பத்தில் இருந்தே நம்மை தயார்படுத்தி வைத்திருக்கிறோம். ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டாலும் அதை ஈடுசெய்யும் வகையில் கைவசம் ஒரு திட்டத்தை வைத்துக்கொள்வது நல்லது. அதனால் ஒரு சிறு தயக்கத்தால் தேங்கிவிடாமல் ஒரு சின்ன ரிஸ்க் எடுப்பதில் எந்த தவறும் இல்லை. இதன் மூலம் ஏற்படும் பின்விளைவுகளை மனதில் கொண்டிருக்க வேண்டும்.

நேர்மையே சிறந்த பண்புபொருளீட்டும் முயற்சிகளில் நாம் தவறவிட்டுவிடுவது அடிப்படை குணமான நேர்மையை. அதிவேகமாக முன்னேறும் ஆசை எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அதைத் தவறான வழிகளில் அடைய முயற்சித்தால் ஒரு முறை வேண்டுமானால் நாம் வெற்றி பெறலாம். ஆனால் அடுத்த முறை நாம் சறுக்கிவிட வாய்ப்புகள் அதிகம். உடனடி முடிவுகளை எதிர்பார்த்து நம் லட்சிய நோக்கத்தை தவற விட்டுவிடக் கூடாது.

இதெல்லாம் பொதுவான ஒரு தொழில்முனைவோராக நாம் கவனிக்க வேண்டிய, நம்மிடம் இருக்க வேண்டிய விஷயங்கள். இத்துடன் இந்த செக்லிஸ்ட்டையும் வைத்துக்கொள்ளுங்கள். மேற்சொன்னவற்றை மனதில் வைத்துக் கொண்டு, கீழுள்ள பண்புகளில் பாதிக்கும் மேல் உங்களிடம் இருந்தால் கூட, நீங்கள் சிறப்பான தொழில்முனைவோராக ஆகிவிடலாம்.

* எந்த சூழலிலும் தெளிவாக யோசிக்கும் மனநிலை= தைரியமாக கருத்தை முன்வைக்க வேண்டும்

* ஒரு விஷயம் வொர்க்அவுட் ஆகாமல் போனால், அதே உற்சாகத்துடன் அடுத்து என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்

* கிரியேட்டிவாக யோசித்தல்

* அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்

* எடுத்த முடிவில் இருந்து விலகாமல் இருப்பது

* தொடர்ந்து ஒரு நெட்வொர்க்கை உருவாக்கிக் கொண்டே இருப்பது

* நாம் எடுக்கும் முடிவுகளுக்கு பொறுப்பை ஏற்பது

* யோசித்து ரிஸ்க் எடுப்பது

* தொடர்ந்து முயற்சி செய்வது

* தேவையான உதவிகளை தயங்காமல் கேட்பது.மன அழுத்தமும், சோர்வும் தவிர்க்க முடியாதவைதான்! ஆனால், அவற்றையும் சமாளிக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. அடுத்தது, தொழில்முனைவோரின் மனநல ஆரோக்கியம் சார்ந்து பேசுவோம்...

Related Stories: