கோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம் தான் பனைமரம். கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. நுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களை தருகிறது. நுங்கு கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தர்பூசணி, இளநீர், மோர் என்று பல கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தந்தாலும் நுங்குக்கு என்று தனிச் சிறப்பு பல உள்ளன.

எப்படி தென்னைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு உதவுகிறதோ அது போல் பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு உதவுகிறது. பனை மரத்தின் முற்றாத பனங்காயே நுங்கு ஆகும். இதற்கு என்று ஒரு பருவம் உள்ளது. இந்த பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவ நிலை கலந்த திண்மப் பொருள் மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும். பனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை. நுங்கில் 10-11 சதவீதம் சர்க்கரை சத்தும், இரண்டு சதவீதம் புரதச் சத்தும் உள்ளன.

× RELATED பல்வேறு நன்மைகள் கிடைக்கும்