ப்ளெயின் குஸ்கா

செய்முறை

குக்கரில் எண்ணெய், நெய் சமஅளவு சேர்த்து அதில் பட்டை, ஸ்டார் பூ, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கம் சேர்த்து பெரிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து வதக்கவும். பின் புதினா, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலா, தயிர் சேர்த்து வதக்கியவுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்து சிறிதளவு நெய், புதினா, கொத்தமல்லி சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வைத்து இறக்கினால் கமகமக்கும் குஸ்கா ரெடி. இதனுடன் சிக்கன் குருமா, காய்கறி குருமா மற்றும் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம்.

Tags : Plain Cusca ,
× RELATED புதினா சர்பத்