வரமிளகாய் கோழி வறுவல்

செய்முறை

சிக்கனை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும். கடாயில் வரமிளகாய், தனியாவை சேர்த்து வறுத்த பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை நன்கு வதக்கவேண்டும். பிறகு இதனுடன் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் வேகவைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்க்கவும். சிக்கன் வதங்கியதும் உடன் பொடித்த வரமிளகாய், கரம் மசாலா மற்றும் தனியா தூளை சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் நன்றாக வெந்து மசாலாவுடன் இணைந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கவும்.

Tags :
× RELATED புதினா சர்பத்