கோவை அருகே போதையில் ரயிலை மறித்த வாலிபர் நூலிழையில் உயிர் தப்பினார்

கோவை: கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி நேற்று முன்தினம் மாலை பாசஞ்சர் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. துடியலூர் கடந்து சென்றபோது ஒரு வாலிபர் ரயில் பாதையின் நடுவே வந்து நின்றார். இதைப்பார்த்த ரயில் இன்ஜின் டிரைவர் ஹாரன் அடித்தார். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அந்த நபர் ரயில் தண்டவாளத்தில் கால் நீட்டி படுத்துக் கொண்டார். அதிர்ச்சி அடைந்த இன்ஜின் டிரைவர், ரயிலில் பிரேக் பிடித்தார். ஆனால், ரயில் அந்த நபரை கடந்து சிறிது தூரம் சென்ற பின் நின்றது. இதைத்தொடர்ந்து ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் பயணிகள் கீழே இறங்கி சென்று பார்த்த போது அந்த நபர் கால்நீட்டி ரயில் பாதையின் நடுவே படுத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. அவரை பத்திரமாக வெளியே மீட்டனர். தண்டவாளத்தில் படுத்து கொண்டதால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மது போதையில் இருந்த அந்த நபர் தற்கொலை முடிவில் வந்திருப்பதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ரயில் புறப்பட்டு சென்றது.

Related Stories:

>