×

பதிவுதுறை அலுவலகத்தில் விடிய, விடிய ரெய்டு கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் சிக்கியது: அதிகாரிகள், புரோக்கர்கள் கலக்கம்

சேலம்: சேலம் சூரமங்கலம் பதிவுதுறை அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த விஜிலென்ஸ் சோதனையில்,  கட்டுக்கட்டாக பணம், முக்கிய ஆவணங்கள், டைரிகள் சிக்கியது. சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவுக்கு பணம் வசூலிப்பதாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜீக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை 5.45மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் புகுந்து, சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. நேற்று அதிகாலை 5.45 மணிக்குத்தான் முடிந்தது.

இந்த சோதனையில்,  கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்ததை போலீசார் கைப்பற்றினர்.  மேலும், அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களையும், டைரிகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். இதுகுறித்து சூரமங்கலம் சார்பதிவாளர் இந்துமதி, புரோக்கர்கள் உள்பட 6 பேரிடம்  தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விஐபிக்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த உதவியாளர் காவேரி பணியாற்றும் அலுவலகத்தில் சோதனை நடந்ததால் பதிவுத்துறை அதிகாரிகள், புரோக்கர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


Tags : Vidya , Vidya, Vidya raid at registrar's office
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கி...