தேசிய மரபுசார் விதைகள் பாரம்பரிய உணவு திருவிழா: கல்வி அமைச்சர் பங்கேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே தேசிய மரபுசார் விதைகள், பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. அதில், கல்வி துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரியில் உழவர்கள் உற்பத்தியாளர்கள் குழுமம் சார்பில், அதன் நிறுவன தலைவர் சோமசுந்தரம் தலைமையில் விதையும் அமுதும் என்ற தலைப்பில் தேசிய மரபுசார் விதைகள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடந்தது. தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ஆதிரங்கம் நெல் ஜெயராமன், நெல் பாதுகாப்பு மைய குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் பேசுகையில், இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய உணவு குறித்து, இன்றைய தலைமுறை மாணவர்களிடம் கொண்டு செல்ல ஆலோசிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இருந்து இயற்கை விவசாயிகளை ஒன்றிணைத்து, தரமான, பாரம்பரிய மிக்க மளிகை பொருட்கள் அனைத்து மக்களுக்கும் நியாயமான விலையில் சென்றடையும் நோக்கில் இந்த விழா கொண்டாடப் பட்டது என்றார். இவ்விழாவில், ‘‘மா’’ என்ற பெயரில் விவசாய வங்கி ஒன்றை துவங்கி, அதன் மூலம் நெல், காய்கறிகள், பழங்கள் உள்பட 4ஆயிரம்  விதைகள், ஆயிரம் விவசாயிகளுக்கு  வழங்கப்பட்டன. மேலும், நம்  முன்னோர்கள் காலத்து  17 வகையான நெல்விதைகள், 100 வகையான   ஹெர்பல் விதைகள், 147 வகையான மரக்கன்று விதைகள், 230 வகையான பழம்,  காய்கறி விதைகள் மற்றும் சிறுதானியம், நவதானியம், பல்வேறு வகையான நெல் விதைகள், சோளப்பயிர்கள் என ஊட்டச்சத்து நிறைந்த நாம் மறந்து போன  பாரம்பரியமிக்க பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப் படுத்தப்பட்டு இருந்தன.

Related Stories:

>