மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வின்னம்பூண்டி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அதில், புதுச்சேரியில் இருந்து வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து ஆட்டோவுடன் 500 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அதை கடத்தி வந்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த சூர்யா (30), பூபாலன் (29) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories:

>