4 கிமீ தூரம் நடந்து செல்லும் அவலம்: ரேஷன் கடை அமைக்க கோரிக்கை

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு ஊராட்சி 5 வது வார்டு உறுப்பினர் ஜா.சுதாதேவி ஜானகிராமன், கலெக்டர் ஆல்பிஜான் வர்கீசிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது. மப்பேடு ஊராட்சி மேட்டுச்சேரி மற்றும் பூவல்லிக்குப்பம் ஆகிய கிராமங்களில் சுமார் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. எங்கள் கிராம மக்களுக்கான ரேஷன் கடை சுமார் 4 கிமீ தூரத்தில் உள்ள விஸ்வநாதபுரத்தில் அமைந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, மேற்கண்ட பகுதி மக்கள், 4 கிமீ தூரம் சென்று வரவேண்டும். குறிப்பாக, பெண்கள், முதியோர், சிறுவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் சரியாக உணவு பொருட்களை வாங்க முடியாமல் ஆகிறது. இதையொட்டி, கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி, மேற்கண்ட பகுதியில் தனி ரேஷன்கடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: