×

முகமது நபி பற்றி விஷமம் பெண் முதல்வருக்கு தூக்கு: பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி

லாகூர்: பாகிஸ்தானில் முகமது நபிகள் பற்றி அவதூறு கருத்தை பரப்பிய, மகளிர் பள்ளி பெண் முதல்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நிஸ்தார் காலனியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் சல்மா தன்வீர். இவர், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் போது ‘முகமது நபிகள் இஸ்லாமின் கடைசி இறை தூதரல்ல,’ என்று கூறியதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீது 2013ம் ஆண்டு வழக்கு பதியப்பட்டது.  இவ்வழக்கின் விசாரணை, மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வந்தது.

அப்போது தன்வீரின் சார்பில் ஆஜரான வக்கீல் முகமது ரம்ஜான், ‘எனது கட்சிக்காரர் ஒரு பெண் மட்டுமின்றி,  மனநோயாளியும் கூட. இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்,’ என்றார். ஆனால், பஞ்சாப் மனநல சுகாதார நிறுவனம் ‘தன்வீரை பரிசோதித்து அளித்த அறிக்கையில், அவர் மனநோயாளி அல்ல என்று தெரிவித்தது.  இதையடுத்து, தெய்வ நிந்தனை செய்ததற்காக தன்வீருக்கு தூக்கு தண்டனை விதித்தார். ரூ.3000 அபராதம் விதித்தார். பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை சட்டம் மூலம் 1987ம் ஆண்டு முதல் 1,472 பேர் தண்டிக்கப்பட்டு உள்ளனர்.

Tags : Woman lashes out at woman chief over Prophet Mohammad: Pakistani court action
× RELATED டெல்லியில் பாகிஸ்தான் தீவிரவாதி கைது