×

ரோஜர் ஹன்ட் மரணம்

1966 உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்காக விளையாடியவர் ரோஜர் ஹன்ட் (83). முதுமை காரணமாக நேற்று மரணமடைந்தார். 34 சர்வதேச ஆட்டங்களில் 18 கோல் அடித்துள்ளார். அதில் 3 கோல் உலக கோப்பை வெற்றிக்காக அடித்தவை. இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கிளப் லிவர்பூல் அணிக்காக 404 ஆட்டங்களில் விளையாடி 244 கோல் அடித்துள்ளார். அந்த அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். அவரது மறைவுக்கு லிவர்பூல் அணி நிர்வாகம், கால்பந்து பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Roger Hunt , Death of Roger Hunt
× RELATED டி20 உலக கோப்பை சூப்பர்-12 சுற்றில் வங்கதேசம்