ஐபிஎல் ஹிட்ஸ்

* டெல்லி அணிக்காக அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை கேப்டன் ரிஷப் பன்ட் நேற்று படைத்தார். அவர் 2390 ரன் குவித்துள்ளார். அதிக முறை (7) ரன் அவுட்டான டெல்லி வீரர் என்ற வேதனையும்! நேற்று அவருக்கு சொந்தமானது.

* ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 400க்கும் அதிகமான பந்துகளை சந்தித்து குறைந்த முறை பந்தை எல்லைக்கு விரட்டியவர்கள் பட்டியலில் ஷ்ரேயாஸ் அய்யர் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் சந்தித்த 400 பந்துகளில் 13.41 சதவீதம் பவுண்டரிகளாக மாறியுள்ளன. அவருக்கு அடுத்த இடங்களில் அம்பாதி ராயுடு (13.54 சதவீதம்), கேன் வில்லியம்சன் (13.68 சதவீதம்), விராத் கோஹ்லி (13.72 சதவீதம்), ஸ்டீவன் ஸ்மித் (14.05 சதவீதம்) ஆகியோர் உள்ளனர்.

* டெல்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நேற்று 6 தென்னிந்தியர்கள் விளையாடினர். அஷ்வின், ஷ்ரேயாஸ் (டெல்லி), தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர், சந்தீப் வாரியர் (கொல்கத்தா) ஆகியோர் இரு அணிகளிலும் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் தமிழ் பேசத் தெரியும் என்பது கூடுதல் தகவல்.

Related Stories:

>