×

கைதான மோசடி மன்னனுடன் தொடர்பா? நடிகர் பாலா பேட்டி

திருவனந்தபுரம்: கேரளாவில் போலி புராதன பொருட்கள் விற்பனை மையம் நடத்தியதாக, மோன்சன் மாவுங்கல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த மோசடி மன்னனுக்கும் நடிகர் பாலாவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் பாலா. அஜித் நடித்த வீரம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர ஏராளமான மலையாள படங்களில் நடித்து உள்ளார். மோன்சனுக்கும் அவரது டிரைவர் அஜித்துக்கும் தகராறு ஏற்பட்டது. இது பற்றி அஜித் கொச்சி போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் அஜித்தை தொடர்பு கொண்ட நடிகர் பாலா, மோன்சன் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் மறுத்துவிட்டார். அஜித்தும், பாலாவும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ பரவியதன் மூலம் மோசடி மன்னன் மோன்சனுக்கும் பாலாவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியது.

இதுகுறித்து பாலா கூறியதாவது: நான் கொச்சியில் இருந்தபோது மோன்சனின் பக்கத்து வீட்டில் வசித்தேன். இதனால், அவருக்கும் எனக்கும் பழக்கம் இருந்தது. அவர் நல்ல காரியங்கள் செய்து வந்தார். இதனால், அவரை எல்லாருக்கும் பிடிக்கும். அவர் செய்த மோசடி குறித்து எனக்கு தெரியாது. அஜித் என்னிடம் வேலை பறிபோய் விட்டது என்று கூறினார். அப்போது தான் அஜித் புகார் அளித்தது தெரியவந்தது. அப்போது அவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குமாறு கூறினேன். ஆனால் அவர் செய்த மோசடி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

Tags : Bala , Contact the arrested fraud king? Interview with actor Bala
× RELATED சிறையில் இருந்து கொண்டே ரூ.200 கோடி...