கொண்டை கடலை, நெல் உள்ளிட்ட 35 சிறப்பு பயிர் வகைகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

புதுடெல்லி: பருவநிலை மாற்றங்களை தாங்கி அதிக மகசூல் தரக்கூடிய, ஊட்டச்சத்து குறைபாடுகள் நீக்கப்பட்ட 35 பயிர் வகைகள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐசிஏஆர்)  உருவாக்கப்பட்டுள்ளன. சிறப்பு பண்புகளைக் கொண்ட இவற்றை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த பட்டியலில் வறட்சியை தாங்கும் கொண்டைக்  கடலை வகைகள், பிஜியன் கடலை, விரைவில் மகசூல் அளிக்கும் சோயாபீன், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட அரிசி, கோதுமையை போல் நேரடியாக நிலத்தில் விதைத்தால் விளையும் நெல் விதை, செரிவூட்டப்பட்ட கோதுமை வகைகள், முத்து தினை, மக்காச் சோளம் போன்றவை உள்ளன.

இவற்றை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி காணொலி மூலமாக இதில் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘விவசாயத்துக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் பருவநிலை மாற்றம் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதன் விளைவாக புதிய வகை பூச்சிகள், புதிய நோய்கள், தொற்றுநோய்கள் வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் சுகாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. இதன் விளைவாக விவசாயிகளும், மீனவர்களும் பெரும் இழப்பை சந்திக்கின்றனர்,” என்றார்.

Related Stories:

>