பவானிப்பூர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவை பவானிப்பூர் தொகுதி  திரிணாமுல் எம்எல்ஏ ராஜினாமா செய்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்தும்படி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இம்மாநில தலைமை செயலாளர் திவேதி கடிதம் எழுதினார். இதை ஏற்று, செப்டம்பர் 30ம் தேதி இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்தலுக்கு தடை விதிக்கும்படி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பயான் சின்கா என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

பொறுப்பு தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால், நீதிபதி ராஜஸ்ரீ பரத்வாஜ் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தலைமை செயலாளர் தனது பதவியை காட்டிலும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சியின் ஊழியராக தன்னை முன்னிறுத்தி கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். யாரோ ஒருவர் அந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ராஜினாமா செய்கிறார்கள். இந்த தேர்தலுக்கான செலவை யார் ஏற்பார்கள்? நாளை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், பவானிப்பூர் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது,’ என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

Related Stories: