விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

சென்னை: திருவள்ளூர் ஒன்றியம், திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் - விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி, காணொலி மூலம்  விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது. பருவகால மாற்றத்திற்கான ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன், காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் பெ.சாந்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வேளாண் துறை துணை இயக்குநர் பாண்டியன் திட்டங்கள் குறித்து பேசினார். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் பானுமதி நெல் ரகங்கள் மற்றும் பருவ காலத்தில் பயிர் செய்வது குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>