மூணாறு சாலையில் பாறைகள் சரிந்து போக்குவரத்து பாதிப்பு

போடி: மூணாறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாறை சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரள மாநிலம், மூணாறு பகுதியில் கொச்சிதனுஷ்கோடி ேதசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. சாலையோர தடுப்புச்சுவர், பாலம் கட்டுதல் ஆகிய பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் தேவிகுளம்  முட்டுக்காடு இடையே, கேப் ரோடு பகுதியில் சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. இப்பகுதியில் பலமுறை பஸ்கள் உருண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் சாலையை 2 முறை விரிவாக்கம் செய்தனர். தற்போது 3வது முறையாக சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வருவதால், நேற்று காலை கேப் ரோடு பகுதியில் சாலையில் பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் பாறைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: