மதுரை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக லிப்ட் பழுத்தால் பரபரப்பு: விபத்தில் சிக்கிய ரேசன்கடை ஊழியர்கள் மீட்பு

மதுரை: மதுரை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக லிப்ட் திடிரென பழுதானதில் லிப்டில் சிக்கிய ரேசன்கடை ஊழியர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டிடம் கடந்த கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. ஏற்கனவே செயல்பட்டு வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த அலுவலகங்கள் அனைத்தும் புதிய கூடுதல் அலுவலக கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டிடத்தில் உள்ளே இரண்டு லிப்ட்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தை சேர்ந்த ரேசன் கடை ஊழியர்களான அமுதா மற்றும் மாற்றுத்திறனாளியான பிரபு ஆகிய இருவரும் லிப்டில் இரண்டாவது தளத்திற்கு சென்றபோது திடிரென லிப்ட் பழுதாகி இடையிலயே நின்று விட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கிருந்த ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து லிப்ட் கதவை உடைத்து இருவரையும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்த மீட்பு பணியினை மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் நேரில் பார்வையிட்டு தீயணைப்புத்துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

Related Stories: