திருச்சியில் உரிய விலை இல்லாததால் ஆற்றில் கொட்டப்பட்ட ஒன்றரை டன் பூக்கள்.: பிச்சி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களின் விலையும் சரிந்தது

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உரிய விலை கிடைக்காததால் வேதனை அடைந்த வியாபாரிகள் சுமார் ஒன்றரை டன் பூக்களை ஆற்றில் கொட்டி சென்றுள்ளனர். மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள், மணப்பாறை பூ மார்க்கெட், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் கோவில்கள் மூடப்படுவதினாலும், சுபநிகழ்ச்சிகள் இதுவும் நடைபெறாததாலும் பூக்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. ரூ.60-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கேந்தி பூ தற்போது ரூ.2-க்கும் மட்டுமே விற்கப்படுகிறது.

மேலும் பிச்சி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களின் விலையும் குறைந்ததால் வேதனை அடைந்த வியாபாரிகள் சுமார்  ஒன்றரை டன் பூக்களை கண்ணீருடன் ஆற்றில் கொட்டினார். குறிப்பாக உரம்,  இடுபொருட்களின் விலை உயர்வு உட்பட விலைவாசியும் விண்ணை முட்டுவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக கூறியுள்ளனர்.

Related Stories:

>