மூவரசன்பட்டு ஊராட்சி வளர்ச்சி அடைய திமுக வேட்பாளர்களை வெற்றிப்பெற செய்யுங்கள்: அமைச்சர் அன்பரசன்

ஆலந்தூர்: சென்னை மூவரசன்பட்டு ஊராட்சி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ராகவா நகரில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.கண்ணன், பொதுச் செயலாளர் ஜி.பி.பாபு, பரங்கிமலை ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்குமார், தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன், மாவட்ட பொறியாளர் அணி இணை செயலாளர் சதீஷ் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு ‘’ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜி.கே.ரவி, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மனோகரன், ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடும் பிரபு, வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 12 வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவைத்தார்.

இதன்பின்னர் அமைச்சர் அன்பரசன் பேசியது; ஊராட்சி மன்ற தேர்தலுக்கு பிறகு மூவரசன்பட்டு பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின் அருகில் உள்ள நங்கநல்லூர்போல் வளர்ச்சி அடையும். குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மழைக்காலங்கள் வெள்ளநீர் வீடுகளில் செல்வதை தடுக்க அகலமான கால்வாய் அமைத்து கீழ்க்கட்டளையில் இணைக்கப்படும். ஆளும் கட்சியாக இருப்பதால் திமுக சார்பில், போட்டியிடும் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களித்தால் உங்கள் பகுதி வளர்ச்சி அடையும்.‘ இவ்வாறு பேசினார். கூட்டத்தில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜி.கே.வி.பிரபாகரன், வார்டு வேட்பாளர்கள் அம்சவேணி அன்பு, விக்டோரியா, லாவண்யா அசோக், உமா பாஸ்கரன், கஸ்தூரி முரளி, லதா சந்திரன், எம்.கே.பழனி, சதீஸ், சுகுமார், கிரண், பெருமாள், பிரகாஷ், திமுக நிர்வாகிகள் அப்துல் காதர், உதயா, ஜெகன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

Related Stories: