சிறுமிகள் ஆபாச வீடியோ பார்த்த மாஜி எஸ்ஐ உள்பட 26 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காட்டில் ரகசியமாக சிறுமிகளின் ஆபாச வீடியோ பார்த்த மாஜி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. உலகம் முழுவதும் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பார்ப்பது அதிகரித்து வந்தது. இதையடுத்து இதுபோன்ற ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டன. அதையும் மீறி பல்வேறு நாடுகளில் ஆபாச படங்களை பார்த்து வருகின்றனர்.

இதை தடுப்பதற்காக ஆபாச வீடியோக்கள் பார்க்கிறவர்களின் விவரங்களை சர்வதேச போலீசார் அந்தந்த நாடுகளுக்கு தெரிவித்து வருகின்றனர். அதன்படி அந்தந்த நாட்டு போலீசார் அதிரடி சோதனை நடத்தி சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் பார்ப்பவர்களை கைது செய்து வருகின்றனர். கேரளாவில் இதுபோன்ற ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை கண்டுபிடிப்பதற்காக ‘ஆபரேஷன் பி ஹண்ட்’ என்ற பெயரில் சைபர் கிரைம் போலீசார் அதிரடி ேசாதனை நடத்தி வருகின்றனர்.

இதில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களை கண்காணிக்க ேகரள போலீசார் ஒரு சாப்ட்வேர் உருவாக்கி உள்ளனர். இதில் தடை செய்யப்பட்ட ஆபாச இணையதளங்களை பார்ப்பவர்களை உடனடியாக கண்டுபிடித்து விடலாம். இதை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் சிலர் ஆபாச இணையதளத்தை பார்த்து வருவதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து நேற்று 59 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆபாச இணையதளத்தை பார்த்த பாலக்காடு கோட்டாயி பகுதியை ேசர்ந்த ராஜசேகரன் (60) கைது செய்யப்பட்டார். அவர் ஓய்வு பெற்ற சப் - இன்ஸ்பெக்டர் ஆவார். இதேபோல் மேலும் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து செல்போன்கள், லேப்டாப்புகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் இதுபோன்ற ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை கண்டுபிடிப்பதற்காக ‘ஆபரேஷன் பி ஹண்ட்’ என்ற பெயரில் சைபர் கிரைம் போலீசார் அதிரடி ேசாதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>