திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம்; ‘யூடியூப்’ சேனலை பார்த்து கர்ப்பம் கலைக்க முயற்சி: விவகாரத்தில் முடிந்ததால் பெண் ‘அட்மிட்’

நாக்பூர்: திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர், யூடியூப் பார்த்து கர்ப்பத்தை கலைக்க முயன்றதால் சம்பந்தப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் யஷோதரா நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை, ஷோயப் கான் (30) என்ற நபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த 2016ம் ஆண்டு முதல் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண் கர்ப்பமானார்.

இதையறிந்த ஷோயப் கான், அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க வலியுறுத்தி உள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்தார். விஷயம் வெளியே தெரிந்தால், அவமானம் ஏற்பட்டுவிடுமே என்று எண்ணிய ஷோயப் கான், யூடியூப்பில் கர்ப்பத்தை கலைப்பது எப்படி? என்ற தலைப்பில் வரும் வீடியோக்களைப் பார்த்துள்ளார். அந்த வீடியோவில் கூறிய மருந்துகளை எடுத்துக்கொள்ளும்படி, அந்த பெண்ணிடம் வற்புறுத்தினார். ஒருகட்டத்தில் வேறுவழியின்றி அந்த பெண்ணும் தனது கர்ப்பத்தை கலைக்க சம்மதம் தெரிவித்து, ஷோயப் கான் வாங்கிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.

ஆனால், அந்த மருந்துகள் அந்த பெண்ணின் உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தியது. மயக்க நிலையில் 2 நாட்களாக வீட்டில் கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதித்தில் அந்த பெண் கர்ப்பமாக இருப்பதும், கருவை கலைக்க கண்ட கண்ட மாத்திரைகளை தின்றதும் தெரியவந்தது. அந்த பெண்ணிடம் மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்தி, இவ்விவகாரம் தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணமான ஷோயப் கானை பிடித்து விசாரித்தனர். முழு விபரங்களையும் கேட்டறிந்த நாக்பூர் போலீசார், ஷோயப் கானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>