3 எம்பி, 30 எம்எல்ஏ பதவிக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தேதி அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள 3 எம்பி மற்றும் 30 எம்எல்ஏ பதவிகளுக்கான இடைத் ேதர்தல் வரும் அக். 30ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘நாடு முழுவதும் காலியாக உள்ள மூன்று மக்களவை மற்றும் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 30ம் தேதி நடைபெறும். மக்களவை தொகுதிகள் பட்டியலில் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன், மத்திய பிரதேசம் - கண்ட்வா, இமாச்சல பிரதேசம் - மண்டி ஆகியனவாகும்.

மேலும், 14 மாநிலங்களில் 30 சட்டசபை தொகுதிகளின்படி ஆந்திரா - ஒன்று, அசாம் - ஐந்து, பீகார் - இரண்டு, அரியானா - ஒன்று, இமாச்சல பிரதேசம் - மூன்று, கர்நாடகா - இரண்டு, மத்திய பிரதேசம் - மூன்று, மகாராஷ்டிரா - ஒன்று, மேகாலயா - மூன்று, மிசோரம் - ஒன்று, நாகாலாந்து - ஒன்று, ராஜஸ்தான் - இரண்டு, தெலங்கானா - ஒன்று, மேற்கு வங்கம் - நான்கு இடங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: