கூடலூர் அருகே தோட்டத்தொழிலாளியை கொன்ற புலி சிக்குமா?..: 4-வது நாளாக புலியை பிடிக்க தேடுதல் வேட்டை தொடர்கிறது

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தொழிலாளியை கொன்ற புலியை தேடும் பணியை 4-வது நாளாக முடிக்கிவிடப்பட்டுள்ளது. கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளி கிழமை சந்திரன் என்ற தொழிலாளி புலி தாக்கியதில் உயிரிழந்தார்.

புலியின் நடமாட்டத்தால் வேலைக்கு செல்ல முடியாமல் பீதி அடைந்துள்ள தொழிலாளிகள், புலியை பிடிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 60-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். .

ஆனால் புலி இதுவரை சிக்கவில்லை. புலி அடிக்கடி இடத்தை மாற்றிவருவதாலும் மற்றும் மழை பெய்து வருவதால் புலியை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் 4-வது நாளாக புலியை பிடிக்கு பணியை முடிக்கிவிடப்பட்டு உள்ள நிலையில், கேரளாவில் இருந்து 10-பேர் கொண்ட சிறப்பு குழு வரவழைக்கப்பட்டுள்ளது.

புலியின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் கவச உடைகளுடன் மொத்தம் 90-க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக புலி விரைவில் சிக்கும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. புலியை தேடும் பணி தொடர்வதால் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தொழிலாளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: