கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தேர்வை மண்டல இணை பதிவாளர் ஆய்வு

வேலூர் :வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்று வரும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி 2020-2021 முழு நேரம் மற்றும் 21 வது அஞ்சல் வழிபட்டய பயிற்சி இறுதி தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வை வேலூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் பிரபு, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சந்திரன், பிரச்சார அலுவலர் அசோகன், மேலாண்மை நிலைய முதல்வர் (பொ) ஏழுமலை. தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் கருணைவேல், ரகு, சதிஷ்குமார், தயாளன் கூட்டுறவுசார் பதிவாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>