காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் நியமனம்

டெல்லி : காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசானது காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துள்ளது.உச்ச நீதிமன்றம் உத்தரவினால் காவிரி நதிநீர் பிரச்னைகளை தீர்பபதற்கும், நதிநீர் பகிர்வு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் இந்த ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த எஸ்.கே.ஹல்தர் காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரின் பதவி காலம் வருகின்ற 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக இருந்த எஸ்.கே.ஹல்தர் நிரந்தர தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முழுநேரத் தலைவராக செளமித்ர குமார் ஹல்தாரை நியமனம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்கும் நாளிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் முழுநேரத் தலைவராக செயல்படுவார்.மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே.ஹல்தர் நவம்பர் 31-ம் தேதி ஓய்வுபெறுகிறார். ஓய்வுக்குப் பிறகு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக ஹல்தர் ஒப்பந்த அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: