தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி : அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

சென்னை : தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதாக மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் சேலத்தில் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தினமும் 50,000 பேர் பயன்பெறுகின்றனர்.

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.1,650 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சுமார் 800 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. புதிய கூடுதலாக பெறப்பட்ட 850 மருத்துவ படிப்பு இடங்களுக்கு இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும். விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி கல்லூரிகளில் தலா 150 மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் கல்லூரிகளில் தலா 100 மாணவர்  சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்மா மினி க்ளினிக் என்பது பெயரளவில் தான் இருந்தது. எந்த இடத்திலும் பயன் அளிக்கவில்லை,என்று தெரிவித்தார்.

Related Stories:

>