உயரும் தங்கத்தின் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.32 அதிகரித்து ரூ.34,840க்கு விற்பனை..கலக்கத்தில் இல்லத்தரசிகள்..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,355க்கும், சவரன் ரூ.34,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.70க்கு விற்பனையாகிறது. இந்த செப்டம்பர் மாதத் தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. காலையில் உயர்வதும், மாலையில் அதிரடியாக சரிவதுமே தங்கத்தின் வேலையாக உள்ளது. கொரோனா காலத்தில் தங்கம் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் இல்லத்தரசிகளுக்கு அதன் மீதான மோகம் மட்டும் சற்றும் குறைந்தபாடில்லை. வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 4351க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.34,808க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னையில்  ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4355க்கும்,  ஒரு சவரன் தங்கம் விலை ரூ.34840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 37720க்கும், இன்று 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.37752க்கும் விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் நகை வாங்குவோர் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பண்டிகை காலங்களில் தங்கத்தின் விலை சவரன் 35 ஆயிரத்திற்கு கீழ் சென்றிருப்பது சற்று ஆறுதல் அளிக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது.

Related Stories:

>