×

அன்று கன்னத்தில் அறை.. இன்று முட்டை வீச்சு : பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மீது வலுக்கும் எதிர்ப்பு!!

பாரீஸ் : பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மீது பொது நிகழ்ச்சி ஒன்றில், முட்டை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு பிரான்சில் உள்ள லியோனில் சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் மீது கூட்டத்தில் இருந்து ஒருவர் முட்டையை வீசினார். உடனடியாக அவரின் பாதுகாவலர்கள் அதிபரை சூழ்ந்து கொண்டனர். மேக்ரான் தோளில் விழுந்த முட்டை பின்னர் கீழே விழுந்தது. எந்த திசையில் இருந்து முட்டை பறந்து வந்தது என்பதை கண்டறிந்து முட்டை வீசிய நபரை பாதுகாவலர்கள் மடக்கி பிடித்தனர்.

அதிபருடன் பேச வேண்டும் என்பதற்காக தான் முட்டை வீசினேன் என்று கூறி இருக்கிறார் அந்த நபர். ஆனாலும் அவரை விடாமல் கைது செய்து பாதுகாவலர்கள் அழைத்து சென்றனர்.இதே போன்று கடந்த ஜூன் மாதம் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, அதிபர் மேக்ரானை கன்னத்தில் ஒருவர் அறைந்தார். தற்போது அதிபர் மீது மீண்டும் முட்டை வீசப்பட்டு இருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் 6 மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேக்ரான் மீதான அதிருப்தி பல இடங்களில் வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது. 


Tags : Chancellor Emanuel Macron ,France , பிரான்ஸ், அதிபர் ,இமானுவேல் மேக்ரான்
× RELATED பதவியேற்பு விழா மேடையிலேயே கஞ்சா...