பெங்களூருவில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறை அதிகாரி காலில் கார் ஏறி இறங்கிய சம்பவத்தால் பரபரப்பு

பெங்களூரு: விவசாயிகள் போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் காலில் கார் சக்கரம் ஏறி இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த 9 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தது. இந்தநிலையில், நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் விவசாய சங்கங்கள் பங்கேற்றது.

இதனால் நாடு முழுவதும் ஒன்றிய அரசுக்கு எதிராக பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் பல மாநிலங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தநிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அனந்தராவ் சர்க்கிளில் நேற்று காலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

பெங்களூருவில் வடக்கு காவல் துணை ஆணையர் தர்மேந்திர குமார் அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த சமயம் வேகமாக வந்த காரை அவர் நிறுத்த முயன்றபோது தர்மேந்திர குமாரை இடித்துத் கீழே தள்ளியுள்ளது. மேலும் காரின் முன்சக்கரம் அவரின் காலில் ஏறி இறங்கி உள்ளது. இது தொடர்பாக புரோ கன்னட சங்கத்தின் உறுப்பினரான ஹரீஷ் கவுடா-வை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories:

>