×

ஏமன் நாட்டில் 80% மக்கள் வறுமையால் பாதிப்பு... அரசுக்கு எதிராக பயங்கர வன்முறை.. போலீசார் துப்பாக்கிச் சூடு : ஐ.நா. கவலை

ஏமன் : வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமனில் கடும் வறுமையும் பட்டினியும் நிலவி வருவதால் அந்த அரசுக்கு எதிராக பொது மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ஏமன் நாட்டின் முக்கிய நகரங்களான டைஸ் நகரில் போராட்டக் காரர்கள் ஏமன் நாட்டின் அதிபர் அப்த்ரபு மன்சூர் ஹைதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். முக்கிய மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகளையும் அடைத்து அவர்கள் தீவைத்தனர். இதனால் போராட்டக்காரர்களை விரட்ட போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏமனில் உள்ள உள்நாட்டு கிளர்ச்சிபடையான ஹைதி படைக்கு எதிராக கடந்த 6 ஆண்டுகளாக சவூதி அரேபியா கூட்டு படைகள் சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையால் ஏமன் நாட்டின் பொருளாதாரம் அகலபாதாளத்திற்கு சென்றுவிட்டது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும். தற்போது அங்கு 80% மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இதனால் அரேபியாவுடனான நட்பை ஏமன் அதிபர் துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

Tags : Yemen , ஏமன்,அதிபர் அப்த்ரபு மன்சூர் ஹைதி
× RELATED உலகளவில் 80% பள்ளிகள் திறப்பு