நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் 9 துறைகளில் 29% வேலைவாய்ப்பு அதிகரிப்பு!: ஆய்வு முடிவுகள் வெளியீடு

டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் 9 துறைகளில் 29 சதவீதம் அதாவது 3.8 கோடி வரை வேலைவாய்ப்பு பெருகி இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒன்றிய பணியாளர் அமைச்சகம் சார்பில் முதல் காலாண்டிற்கான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தங்கும் இடம் மற்றும் ரெஸ்ட்ராண்ட், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பி.பி.ஓ., நிதி ஆகிய 9 துறைகளில் 3.8 கோடி வரை வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு 2013 - 14ம் நிதியாண்டு முதல் காலாண்டில் 2.37 கோடி அளவில் வேலைவாய்ப்பு அதிகரித்திருந்தது.

இந்த 9 துறைகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பி.பி.ஓ. துறையில் அதிகபட்சமாக 152 சதவீதமும், சுகாதாரத்துறையில் 77 சதவீதமும், நிதி சேவையில் 48 சதவீதமும், கல்வித்துறையில் 39 சதவீதமும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளன. பொதுமுடக்க நேரத்திலும் 80.7 சதவீத நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கியுள்ளன. 16.6 சதவீத அளவிலான நிறுவனங்கள் ஊதியத்தை குறைத்திருப்பதும், 2.7 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியமே வழங்காததும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல பணிக்கு செல்லும் மகளிர் எண்ணிக்கை 31 சதவீதம் குறைந்திருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: