ரூ.66.25 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த 40 வயது ஆண் பயணி, சுத்தியல் ஒன்று கொண்டு வந்தார். சுங்கத்துறை அதிகாரிகள் அதை சோதனை செய்தபோது, கைப்பிடியில் 341 கிராம் தங்கத்தை மோல்டிங் செய்து இருந்தது. அதன் மதிப்பு ரூ.14.25 லட்சம். அதை பறிமுதல் செய்து, அந்த பயணியை கைது செய்தனர். இதேபோல், குவைத்திலிருந்து குவைத் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 32 வயது ஆண் பயணி, கண்ணாடி பிரேம்களுக்குள் ஒன்றே கால் கிலோ  தங்க துண்டுகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.52 லட்சம். அதை பறிமுதல் செய்து, பயணியை கைது செய்தனர்.

Related Stories:

>