டென்னிஸ் தரவரிசை: சானியா முன்னேற்றம்

ஆஸ்ட்ரவா: மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு தரவரிசையில், இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஒரேயடியாக 42 இடங்கள் முன்னேறியுள்ளார். முன்னணி வீராங்கனையாக வலம் வந்த சானியா (34), குழந்தை பிறந்த பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் போட்டிகளில் விளையாடாமல் இருந்ததால் தரவரிசையில் பின்தங்கினார்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு கத்தார் ஓபன் இரட்டையர் பிரிவில் களமிறங்கினார்.   கிராண்ட் ஸ்லாம்,  ஒலிம்பிக் போட்டிகளில் 3வது, 4வது சுற்று வரையிலும்,  டபிள்யூடிஏ தொடர்களில் காலிறுதி, அரையிறுதி வரையிலும்  முன்னேறி அசத்தினார்.

இந்நிலையில் செக் குடியரசில் நடந்த  ஆஸ்ட்ரவா ஓபன் தொடரில்  சீனாவின் ஷுவாய் ஸாங் உடன் இணைந்து  சாம்பியன் பட்டம் வென்றார். அதன் மூலம் இரட்டையர் தரவரிசையில்  48 இடங்கள் முன்னேறி 62வது இடத்தை பிடித்துள்ளார்.  இரட்டையர் பிரிவில்  2015ம் ஆண்டு  விம்பிள்டன்,  யுஎஸ் ஓபன், 2016ம் ஆண்டு  ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.  கலப்பு இரட்டையர் பிரிவில்  ஆஸி. ஓபன் (2009), பிரெஞ்ச் ஓபன் (2012), யுஸ் ஓபன்(2014) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வசப்படுத்தியுள்ளார். சானியாவுடன் இணைந்து விளையாடிய சீன வீராங்கனை  ஸாங் 3 இடங்கள் முன்னேறி 10 வது இடத்தை பிடித்துள்ளார்.

Related Stories:

>