டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்து பிரதமர் மோடி திடீரென ஆய்வு: திகைத்த ஊழியர்கள்!!

புதுடெல்லி: டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான இடத்தை பிரதமர் மோடி நேற்றிரவு திடீரென ஆய்வு செய்தார். தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் ரூ. 608  கோடி மதிப்பில் கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. முக்கோண வடிவில்  கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மிகப்பெரிய அளவிலான  அரசியலமைப்பு மண்டபம், நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கான லவுஞ்ச், ஒரு நூலகம், நாடாளுமன்ற குழுக்களுக்கான  அறைகள், கேன்டீன் பகுதிகள் மற்றும் ஏராளமான பார்க்கிங் இடவசதிகள்  செய்யப்பட்டு வருகின்றன. இரவு பகலாக நடைபெறும் இப்பணியானது, நாடாளுமன்ற  செயலகம் மற்றும் 3 கி.மீ நீளமுள்ள ராஜ்பாத் எனப்படும் ராஷ்டிரபதி பவனில்  இருந்து இந்தியா கேட் வரை சீரமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனது மூன்று நாள் அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, நேற்றிரவு 8.45 மணியளவில் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை திடீரென ஆய்வு செய்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான நிலை குறித்து அங்குள்ள வல்லுனர்களுடன் கேட்டறிந்தார். மேலும், அங்கு பணியாற்றும் பணியாளர்களிடமும் சிறிது நேரம் பேசினார். கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இந்தக் கட்டுமானப் பணிகள், அடுத்த 21 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>