குடியாத்தத்தில் நள்ளிரவு துணிகரம் கால்சென்டர் ஊழியரின் பைக் திருட்டு-சிசிடிவி கேமராவில் பதிவான ஆசாமிக்கு வலை

குடியாத்தம் : குடியாத்தம் கொசஅண்ணாமலை தெருவில் தனியார் கால்சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த கால்சென்டரில் பணிபுரியும் கோபி என்பவர் நேற்று தனது பைக்கை கீழே நிறுத்திவிட்டு, முதல் மாடியில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.பின்னர், நள்ளிரவில் வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக கீழே இறங்கி வந்தார். அப்போது, அலுவலகத்திற்கு கீழே நிறுத்தியிருந்த அவரது பைக்கை காணவில்லை. அதனை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கோபி இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில், நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அப்பகுதியை நோட்டமிட்டபடி நின்று கொண்டு, போலி சாவியை பயன்படுத்தி பைக்கை திருடிச்செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார், சிசிடிவி கேமரா பதிவான காட்சிகளை வைத்து பைக் திருடிய ஆசாமியை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories:

>